விளையாட்டு

ஆர்சிபியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா?

ஆர்சிபியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா?

EllusamyKarthik

கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா என தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணி வரும் 9-ஆம் தேதி அன்று தொடங்க உள்ள எதிர்வரும் ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த அணியின் இளம் வீரரான படிக்கலுக்கு கொரோனா என சொல்லப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தற்போது வீசி வரும் இரண்டாவது கொரோனா அலையினால் நாளுக்கு நாள் நோய் தொற்றின் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் படிக்கலுக்கும் நோய் தொற்று பாதிப்பு இருப்பது அவருக்கு மேற்கொண்ட பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய தேவ்தத் 473 ரன்களை குவித்திருந்தார். அந்த சீசனின் வளர்ந்து வரும் வீரர் விருதையும் அவர் வென்றிருந்தார். தற்போது அவர் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிகிறது.