விளையாட்டு

படிக்கல், டிவில்லியர்ஸ் அதிரடி - ஹைதராபாத்துக்கு 164 ரன்கள் இலக்கு

படிக்கல், டிவில்லியர்ஸ் அதிரடி - ஹைதராபாத்துக்கு 164 ரன்கள் இலக்கு

rajakannan

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் படிக்கல், ஃபின்ச் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஃபின்ச் நிதானம் காட்ட அறிமுக வீரர் படிக்கல் அதிரடி காட்டி அசத்தினார். அவரது அதிரடியால் பெங்களூரு அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த படிக்கல், 42 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஃபின்ச்சும் 29 (27) ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி நிதானமாக விளையாடி, 13 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியாக சிக்ஸர், பவுண்டரிகளில் விளாசினார். 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த அவர், கடைசி ஓவரில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் அணிக்காக அறிமுக வீரராக ஐபிஎல் தொடரில் களமிறங்கிய நடராஜன் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.