விளையாட்டு

வெற்றி பெற ஒரு ரன் மட்டுமே.. ஆனால், இரண்டு ரன்கள் ஓடிய கோலி !

வெற்றி பெற ஒரு ரன் மட்டுமே.. ஆனால், இரண்டு ரன்கள் ஓடிய கோலி !

EllusamyKarthik

அபுதாபியில் நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்.சி.பி வெயிர் பெற ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இரண்டு ரன்கள் ஓடினார் அந்த அணியின் கேப்டன் விராத் கோலி.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா இருபது ஓவர் முடிவில் 84 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, சுலபமான இலக்கை விரட்டிய பெங்களூரு 39 பந்துகள் எஞ்சிய நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஏழாவது ஓவரில் பெங்களூரு அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் பொறுப்போடு பேட் செய்த கோலி 17 பந்துகளில் 18 ரன்களை எடுத்திருந்தார்.

வெற்றிபெற 40 பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் போதும் என்ற நிலையில் பிரதிஷ் கிருஷ்ணா வீசிய பந்தை தட்டிவிட்டு இரண்டு ரன்கள் ஓடினார். ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அவர் இரண்டாவது ஓடியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

விராட் கோலி ஓடிய அந்த எக்ஸ்டரா எக்ஸ்டரா ரன் கணக்கில் சேர்க்கப்படாத நிலையில் கிரிக்கெட் மீதும், அணியின் மீதும் கோலிக்கு உள்ள அர்ப்பணிப்பை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.