விளையாட்டு

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸின் விநோத சாதனை

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸின் விநோத சாதனை

webteam

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரின் பந்துவீச்சில் இதுவரை 19 பேட்ஸ்மேன்கள் காயம்பட்டு ரிட்டையர்டு ஹர்ட் முறையில் மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.

இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அக்தர், இந்த எண்ணிக்கை மற்றெந்த பந்து வீச்சாளர்களையும் விட அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனைக் குறிவைத்து பந்து வீசுவது, தமக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அக்தர் மனம் திறந்துள்ளார். ஆனால், ஓய்வுக்குப் பின்னர், ஹைடனுடன் நெருங்கிய நடபில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்ல இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான விரேந்திர சேவாக்குடனும் களத்தில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட அக்தர், ஓய்வுக்குப் பின்னர் சமூக வலைதளங்கள் மூலமாக நல்ல நட்பு பாராட்டி வருகிறார்.