விளையாட்டு

"இதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஜெர்சி" - ஜடேஜா

"இதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஜெர்சி" - ஜடேஜா

jagadeesh

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கான ஜெர்சியை அணிந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா சமூக வலைக்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் சுவுத்தாம்ப்டன் நகரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இதற்கான இந்திய அணி கொரோனா விதிமுறையின் கீழ் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவும் மும்பையில் இருக்கும் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணிக்கான ஜெர்சியை அணிந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஜடேஜா. அதில் 1990களில் இந்திய டெஸ்ட் அணியின் ஜெர்சியை போல இருப்பதாக பெருமிதம் தெரவித்துள்ளார்.