விளையாட்டு

ரவீந்திர ஜடேஜா வெளியே..ஷிகர் தவான் உள்ளே

ரவீந்திர ஜடேஜா வெளியே..ஷிகர் தவான் உள்ளே

rajakannan

காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகளும் 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் ஜனவரி 5-ல் தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த ரவீந்திர ஜடேஜா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஜடேஜாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 48 மணி நேரத்தில் குணமடைந்துவிடுவார் என்று நம்புவதாகவும் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஷிகார் தவான், முழுவதுமாக குணமடைந்துள்ளார். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்று தெரிகிறது. இருப்பினும், போட்டி தொடங்கும் நாளின் காலையில் அணி விவரம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.