விளையாட்டு

பிரதமர் மோடியுடன் ஜடேஜா, மனைவி ரிவபா சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஜடேஜா, மனைவி ரிவபா சந்திப்பு

rajakannan

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தனது மனைவியுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டி20 தொடரில் ஜடேஜா இடம்பெறவில்லை. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜடேஜா விளையாடுகிறார். இதனையடுத்து, அவர் இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ஜடேஜா இன்று சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஜடேஜா உடன் அவரது மனைவி ரிவபா சோலங்கி சென்றிருந்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான தகவலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவபா உடனான சந்திப்பு அற்புதமானதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். 

இந்திய அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஜடேஜா, இந்த ஆண்டு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஜொலித்து வருகிறார். இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி உள்ளார்.