சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரநிலைப்பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தில் தொடர்கிறார்.
878 தரமதீப்பிட்டு புள்ளிகளுடன் அஷ்வின் முதலிடத்தில் இருக்கிறார். ரவீந்தர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் தலா 869 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரநிலையிலும் அஷ்வின் முதலிடத்தில் தொடர்கிறார்.
பேட்ஸ்மேன்களுக்கான தரநிலைப்பட்டியில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி 873 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். அவரைவிட 66 புள்ளிகன் கூடுதல் பெற்று ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.