ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், விரைவாக 150 விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் ஆடிவருகிறது. ஆண்டிகுவாவில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் குல்தீப், தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இந்தப்போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் விரைவாக 150 விக்கெட்கள் எடுத்த சுழல் பந்துவீச்சாளார்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்தார். இதுவரை 111 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்களை அவர் வீழ்த்தியுள்ளார். இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் அனில் கும்ப்ளே இருக்கிறார். அவர் 106 போட்டியில் இந்தச் சாதனையை படைத்துள்ளார்.