விளையாட்டு

அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ஆப்கான் ரஷித்!

அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ஆப்கான் ரஷித்!

webteam

ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷின் கான், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர், ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடி கவனிக்கப்பட்டார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் டி20 லீக் போட்டியில் பங்கேற்றார். ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ரஷித்துக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்தப் போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலியாவின், அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் டி20 போட்டி இப்போது தொடங்கியுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் ரஷித் கான் விளையாடுவார் என்று தெரிகிறது. 

இதுபற்றி ரஷித் கான் கூறும்போது, ‘குறைவான ரன்களை விட்டுக்கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறேன். விக்கெட் வீழ்த்துவது பற்றி அதிகமாக கவனம் செலுத்தவில்லை. ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் போட்டியில் விளையாடுவதில் விருப்பம் அதிகம். இதில் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன். அடிலெய்டு ஓவல் பிட்ச் பவுன்ஸ் தன்மை கொண்டது. அது எனக்கு சாதகமாக இருக்கும். டி20 உலக கோப்பைப் போட்டியில் நான் சிறப்பாக விளையாடினேன். அதற்கு பிறகு அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி என்னிடம் பேசினார். இதையடுத்து அந்த அணியில் ஆட ஒப்புக்கொண்டேன். அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்’ என்றார்.