விளையாட்டு

"அவரைப் பற்றி சொல்ல ஒரு வார்த்தை போதாது" - தோனி குறித்து ரஷீத் கான்!

"அவரைப் பற்றி சொல்ல ஒரு வார்த்தை போதாது" - தோனி குறித்து ரஷீத் கான்!

jagadeesh

தோனி குறித்து சொல்ல ஒரு வார்த்தை போதாது என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் ரஷீத் கான்.அப்போது ரசிகர்கள் பலர் இந்திய அணி வீரர்கள் மகேந்திரசிங் தோனி, விராட் கோலி, யுவராஜ் சிங் குறித்து ஒரு வார்த்தையில் பதிலளிக்கும்படி கேட்டுக்கொண்டர். அதற்கு பதிலளித்த அவர் "விராட் கோலி குறித்து ஒரு வார்த்தையில் ‘கிங் கோலி’ எனவும், யுவராஜ் சிங்க்கை ‘சிக்ஸர் மன்னன்’ என்றும் குறிப்பட்டார்.

தோனி குறித்து அவர் "அவரை வர்ணிக்க ஒரு வார்த்தை போதாது' என்று பதிலளித்து ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளினார். மேலும், கடந்த காலத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் வீரருக்குப் பந்துவீச நினைத்தால் நீங்கள் யாருக்குப் பந்து வீசுவீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு, ‘சச்சின்’ என பதிலளித்தார். மேலும், கெவின் பீட்டர்சன் மற்றும் ரோஹித் ஷர்மாவின் ஃபுல் ஷாட் என்னை மிகவும் கவர்ந்தது எனவும் தெரிவித்தார் ரஷீத் கான்.