விளையாட்டு

“புதிய நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம்” - பஞ்சாப் கேப்டன் அஸ்வின்

“புதிய நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம்” - பஞ்சாப் கேப்டன் அஸ்வின்

webteam

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி முதல் பேட்டிங் செய்கிறது.

பஞ்சாப் ராஜஸ்தான் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று ஜெய்பூரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி முதல் பேட்டிங் செய்கிறது. பஞ்சாப் அணியில் பல வீரர்கள் உள்ளதால், 11 பேர் கொண்ட அணியில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்ற குழப்பம் இருந்தது. 

இந்நிலையில் தற்போது விளையாடும் பஞ்சாப் அணியில், கிரிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயாங் அகர்வால், சர்ஃபராஸ் கான், நிகோலஸ் பூரான், மந்தீப் சிங், சாம் குரான், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முஜீப் ஹர் ரகுமான், அங்கிட் ராஜ்பூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் அணியில், அஜிங்யா ரஹானே, ஜாஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்ப கவுதம், ஸ்ரேயாஸ் கோபால், ஜாஃப்ரா ஆர்ஜர், ஜெயதேவ் உனாட்கட் மற்று தவால் குல்கர்னி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

போட்டி தொடர்பாக பேசிய அஸ்வின், “புதிதாக நிறைய பேர் வந்துள்ளனர். பல திறமையுடைய இளைஞர்கள் இருக்கின்றனர். புதிய தொடர், புதிய நம்பிக்கை. விக்கெட்டுகள் பெரிய மாற்றத்தை தராது. ஆனாலும் நாங்கள் முதலில் பந்துவீசவே நினைத்தோம். பழைய வரலாறு பற்றி நான் பொருட்படுத்தவில்லை. நாங்கள் தற்போது தெளிவாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.