விளையாட்டு

சிஎஸ்கே சீரான பந்துவீச்சு - 151 ரன்கள் சேர்த்த ராஜஸ்தான்

சிஎஸ்கே சீரான பந்துவீச்சு - 151 ரன்கள் சேர்த்த ராஜஸ்தான்

webteam

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 151 ரன்கள் சேர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 25வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் ரஹானே மற்றும் பட்லர் இருவரும் ஆரம்பத்தில் அதிரடி காட்டினர். பின்னர் 14 (11) ரன்களில் ரஹானே விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் வந்த சஞ்சு சாம்சன் 6 (6) ரன்களில் வெளியேற, பட்லரும் 23 (10) ரன்களில் நடையைக் கட்டினார். 

பின்னர் வந்த அனைவரும் அடுத்தடுத்து அவுட் ஆக, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 151 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 28 (26) ரன்கள் எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாஹர், தகூர் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது.