விளையாட்டு

158 ரன்கள் சேர்த்தது பெங்களூர் - பார்திவ் படேல் அரைசதம்

158 ரன்கள் சேர்த்தது பெங்களூர் - பார்திவ் படேல் அரைசதம்

webteam

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 158 ரன்கள் சேர்த்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையேயான டி20 போட்டி ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதல் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் பார்திவ் படேல் சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தினர். ஆனால் 23 (25) ரன்கள் எடுத்த நிலையில் கோலி விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர் வந்த பெங்களூர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். டி வில்லியர்ஸ் 13 (9), சிம்ரான் ஹெட்மையெர் 1 (9) என்ற ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பார்திவ் படேல் மற்றும் ஸ்டொயினிஸ் ஆகியோர் நிலைத்து ஆடினர். அரைசதம் அடித்த பார்திவ் படேல் 67 (41) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

பின்னர் வந்த மொய்தின் 18 (9) ரன்கள் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காத ஸ்டொயினிஸ் 31 (28) எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணியில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.