விளையாட்டு

‘நீ கலக்கிட்ட அம்பா’ - ராயுடுவை கட்டிதழுவிய ‘சின்ன தல’

webteam

அம்பதி ராயுடு, வாட்சனின் அபார ஆட்டத்தால் ஹைதராபாத் அணியை எளிதாக வென்று, 2-வது அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் 4 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 179 ரன்கள் எடுத்தது. தவான் 79 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 51 ரன்களும் எடுத்தனர். அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. சென்னை அணிக்கு தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் ராயுடு இருவரும் களம் இறங்கினர். தொடக்க முதலே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் அதிரடியில் மிரட்டினர். 

தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ராயுடு, பின்னர் அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடி வந்த வாட்சன் 57 பந்துகளில் ஆட்டமிழந்தார். அதில் மூன்று சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து வந்த ரெய்னா 2 ரன்களில் வெளியேர கேப்டன் தோனி களம் களம் கண்டார். தொடக்கமுதல் ஹைதராபாத் பந்து வீச்சாளாருக்கு சிம்ம சொப்பனமாக விளையாடிய ராயுடு 62 ரன்களில் 100 ரன்கள் எட்டினார். அதில் 7 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 2018 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ராயுடு தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வருகிறார். 

இதுவரை சென்னை அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி உள்ள ராயுடு 535 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 55.33. மேலும் இன்றைய போட்டியில் சதம் அடித்துள்ள ராயுடுவுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய பிறகு ஓய்வு அறைக்கு சென்ற ராயுடுவை ‘சின்ன தல’ ரெய்னா கட்டி தழுவி ‘ நீ கலக்கிட்ட அம்பா’ என வாழ்த்தியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.