விளையாட்டு

மொகாலியில் மிரட்டுது மழை: நாளைய கிரிக்கெட் போட்டிக்கு சிக்கல்!

மொகாலியில் மிரட்டுது மழை: நாளைய கிரிக்கெட் போட்டிக்கு சிக்கல்!

webteam

மொகாலியில் தொடர்ந்து மழை பெயதுவருவதால் நாளை கிரிக்கெட் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் இழந்த அந்த அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 

தர்மசாலாவில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி மொகாலியில் நாளை நடக்கிறது. 

இதற்காக இந்திய வீரர்கள் மொகாலி வந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மழை பெய்துவருவதால் மைதானம் மூடப்பட்டுள்ளது. ’மழை நீர் தேங்காத வண்ணம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், குறைந்த ஓவர்களில் போட்டியை நடத்த வாய்ப்பிருக்கிறது’ என்று மொகாலி கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தர்மசாலாவில் கடும் மழை காரணமாக, திங்கள்கிழமை இலங்கை வீரர்கள் செல்ல வேண்டிய பிரத்யேக விமானம் தாமதமாக அங்கிருந்து கிளம்பியது.