மழையால் இந்தியா-பாகிஸ்தான் போட்டி பாதிப்பு
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி, 9.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினர். மெய்டன் ஓவருடன் போட்டியைத் தொடங்கிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினர்.