மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்பீரித்துக்கு ரயில்வே துறை பதவி உயர்வு அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பீரித், மேற்கு ரயில்வேயில் அலுவலக தலைமை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்காக அலுவலக தலைமை கண்காணிப்பாளராக இருந்த அவருக்கு, தற்போது ஓ.எஸ்.டீ எனும் சிறப்பு பணிக்கான அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளுக்கு ரூ.1.5 கோடி பரிசுத்தொகையை முன்னாள் ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.