தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை நடப்பு ஐபிஎல் சீசனில் சந்தித்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடனான லீக் ஆட்டத்தில் விளையாடியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டுமென்ற உறுதியோடு ஆடும் லெவனில் நான்கு மாற்றங்களை மேற்கொண்டது ராஜஸ்தான்.
அணிக்கு வலு சேர்க்கும் விதமாக ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸ் ஆடும் லெவனில் இணைந்திருந்தார்.
அதோடு உத்தப்பா, உனட்கட் மற்றும் ரியான் பராக் ஆடும் லெவனில் காம்பேக் கொடுத்திருந்தனர். முதலில் பேட் செய்த ஹைதராபாத் இருபது ஓவர் முடிவில் 158 ரன்களை குவித்தது.
அதனையடுத்து ஆடிய ராஜஸ்தான் பரிசோதனை முயற்சியாக ஸ்டோக்ஸ் மற்றும் பட்லரை ஓப்பனிங்கில் களம் இறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ் ஆட்டத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வெளியேறினார்.
தொடர்ந்து ஸ்மித், பட்லர், உத்தப்பா, சஞ்சு சாம்சன் என விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான். கிட்டத்தட்ட ஹைதராபாத் வெற்றி பெறுவது உறுதியான நிலையில் ராகுல் திவேதியாவும், ரியான் பராக்கும் இணைந்து 85 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து யாருமே எதிர்ப்பார்க்காத நிலையில் சர்ப்ரைஸ் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு ராஜஸ்தான் முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதோடு ராஜஸ்தான் அணி தனக்குள்ளேயே மேட்ச் வின்னிங் பிளேயர்கள் இருந்தும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கி இருப்பது ஏன் என உரக்க கேட்க துவங்கியுள்ளது.