தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் 2 ஆம் நாள் ஆட்டத்தில் ரஹானே சதமடித்து அசத்தினார்.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்பு ரோகித் சர்மாவும், ரஹானேவும் களத்தில் நின்று நிதானமாகவும் சரியான பந்துகளை விளாசியும் சரிந்த அணியை தூக்கி நிறுத்தினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, பீடிட் பந்தை சிக்சருக்குத் தூக்கி, அபார சதமடித்தார்.
இது அவருக்கு 6 வது டெஸ்ட் சதம். இந்த தொடரில் அவர் அடித்துள்ள 3 வது சதம் இதுவாகும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரஹானே இன்று சதம் கடந்து அசத்தினார். இது இவருக்கு 11 ஆவது சதமாகும். ரோஹித் சர்மாவும், ரஹானேவும் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்துள்ளனர். இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரஹானே, ரோஹித் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள், இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது.