விளையாட்டு

கடைசி டெஸ்ட்: ரஹானே மீண்டும் ஏமாற்றம்!

கடைசி டெஸ்ட்: ரஹானே மீண்டும் ஏமாற்றம்!

webteam

இலங்கைக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே ஏமாற்றினார்.

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ரஹானே தொடர்ந்து, 4, 0, 2, 1 என்ற ரன்களே எடுத்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 1 ரன் எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பத்து ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். இதையடுத்து அவரது பார்ம் கேள்விக்குறியாகியுள்ளது. 

இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆட வில்லை என்றாலும் வெளிநாடுகளில் அவரது ஸ்டிரைக் ரேட் அபாரமாக இருப்பதால் தென்னாப்பிரிக்க தொடருக்கு அவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய தேர்வுக் குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.