அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் முன்னேறி உள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் தரநிலையில் இரண்டாம் இடத்தில் உள்ள ரஃபேல் நடால், அரையிறுதியில் இத்தாலியின் பெர்ரிட்டினியை எதிர்கொண்டார். போட்டியின், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், முதல் செட்டை டைபிரேக்கரிலும், மற்ற இரு செட்களை 6-4, 6-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி பெர்ரிட்டினியை வீழ்த்தினார்.
2 மணி நேரம் 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் நடால், ஐந்தாவது முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். அவர் இறுதிப் போட்டியில் டேனில் மெட்வேடேவ்வை சந்திக்க உள்ளார்.