விளையாட்டு

மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: ரஃபேல் நடால் சாம்பியன்

மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: ரஃபேல் நடால் சாம்பியன்

webteam

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் உடன் ஸ்பெயினின் ரஃபேல் நடால் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடால் வெற்றியை வசமாக்கினார்.

மேட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸில் பட்டம் வென்றதை அடுத்து, ரபேல் நடாலுக்கு தரநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தரநிலையில் ஐந்தாவது இடத்தில் இருந்த நடால் ஒரு இடம் முன்னேறியுள்ளார். சுமார் ஆறு மாத காலத்திற்கு பின், தரநிலையில் முதல் நான்கு இடங்களுக்குள் நடால் முன்னேறியிருக்கிறார். தரநிலையில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே முதலிடத்திலும், செர்பிய வீரர் நோவக் ஜோக்கோவிச் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா மூன்றாவது இடத்தில் உள்ளார்.