விளையாட்டு

நடராஜனுக்கு வீடியோ கால்; உற்சாமுடன் வாழ்த்துகள் சொன்ன சரத்குமார், ராதிகா

நடராஜனுக்கு வீடியோ கால்; உற்சாமுடன் வாழ்த்துகள் சொன்ன சரத்குமார், ராதிகா

sharpana

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனிடம் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் வீடியோ காலில் பேசி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் சாதாரண நெசவுத்தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது திறமையால் இந்திய அணிக்குள் இடம் பிடித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள் இந்திய அணி வெற்றிகளைக் குவிக்க காரணமாக இருந்தார்.

இவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துகொண்டுவரும் சூழலில், தேர்தல் சுற்றுப் பயணத்தில் இருக்கும் சரத்குமாரும் ராதிகாவும் வீடியோ காலில் ”நான் நிறைய இடங்களில் உங்களைப் பற்றித்தான் பேசுகிறேன். முதலமைச்சர் யார் வேண்டுமென்றாலும் ஆகலாம்.

ஆனால், திறமை இருந்தால் மட்டுமே வீரர் ஆக முடியும். நடராஜன் திறமை இருக்கவேத்தான் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தீர்கள். சேலத்தில் வாழப்பாடி பக்கத்தில் தான் இருந்தோம். அடுத்தமுறை வீட்டிற்கு வருகிறோம். நீங்களும் சென்னை வந்தால் வீட்டிற்கு வாருங்கள். வாழ்த்துகள்” என்று வீடியோ காலில் பேசி உற்சாகமுடன் தங்கள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர்.