விளையாட்டு

தர்மசாலா டெஸ்டில் அஸ்வின் படைத்த சாதனை

webteam

ஒரு டெஸ்ட் சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்டில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.

ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடந்துவரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் நடப்பு 2016-17 டெஸ்ட் சீசனில் அஸ்வின் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 79 ஆனது. ஸ்மித்தின் விக்கெட்டைக் கைப்பறியதன் மூலம் கடந்த 2007/08 சீசனில் 78 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினின் சாதனையை அஸ்வின் முறியடித்தார். உலகின் முதல்நிலை வீரரான ஜடேஜா நடப்பு சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.