விளையாட்டு

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து : லீக் சுற்றில் இன்றைய போட்டிகள் என்னென்ன?

kaleelrahman

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று தோஹாவில் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் மேள தாளம் முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரசிகர்களின் ஆரவாரத்தோடு வண்மயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதையடுத்து தொடங்கிய முதல் போட்டியில் அனுபவ ஈகுவடார் அணி கத்துக்குட்டி கத்தார் அணியை 2 : 0 என்ற கோல்கணக்கில் பந்தாடியது. இந்நிலையில் இன்று 3 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இதையடுத்து இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள செனகல் அணியும் நெதர்லாந்து அணியும் மோத உள்ளன.

இறுதியாக நடைபெறும் மூன்றாவது போட்டியில் அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகள் களம் காணுகின்றன. இந்த போட்டி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள மூன்று போட்டிகளும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.