விளையாட்டு

சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம்: பி.வி.சிந்துவுக்கு ரூ.50 கோடி!

webteam

பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை, சீனாவை சேர்ந்த நிறுவனம் ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஒலிம்பிக் உட்பட பல போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள இவரை சீனாவைச் சேர்ந்த லீ-னிங் என்ற பேட்மின்டன் உபகரணங்கள் மற்றும் ’ஷூ’ விற்பனை செய்யும் நிறுவனம் ரூ.50 கோடிக்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது. 4 வருடங்களுக்கு அவர் இந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவார்.

லீ-னிங் நிறுவனத்தின் இந்திய பார்ட்னரான, சன்லைட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மகேந்தர் கபூர் கூரும்போது, ‘’உலக பேட்மின்டன் துறையில் இது பெரிய ஒப்பந்தம். ஸ்பான்சர்ஷிப் மூலம் ரூ.40 கோடியும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் ரூ.10 கோடியும் சிந்துவுக்கு கிடைக்கும். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, ’புமா’ நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு நெருக்கமானது இது’’ என்றார். 

விராத், ரூ.100 கோடிக்கு புமா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். வருடத்துக்கு 12.5 கோடி என 8 வருடத்துக்கு இந்த ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறது. 

சிந்துவை, லீ-னிங் நிறுவனம் 2014-15-க்கு பிறகு மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது.