விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

rajakannan

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகளில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் - சீனா வீரர் யூகி ஷீ ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இப்போட்டியில் 21-8, 21-19, 21-9 என்ற செட்டில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அதேபோல், இதே பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், டென்மார்க்கின் கொரியாவின் ஜியோன் ஹேயோக்-ஜின்னை 21-16, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன விராங்கனை சென் யூஃபேவை எதிர்கொண்டார். இப்போடியில் 21-14, 21-14 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் எச்.எஸ்.பிரனோய் இருவரும் மோதவுள்ளனர்.