pv sindhu web
விளையாட்டு

ஜப்பான் ஓபன்| 3 ஆண்டுகளுக்கு பிறகு பட்டத்தை நெருங்கும் பிவி சிந்து.. அரையிறுதியில் அபார வெற்றி!

ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

Rishan Vengai

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் பிவி சிந்து, சீன ஒலிம்பிக் சாம்பியன் சென் யுஃபெயை எதிர்த்து விளையாடினார். போட்டி முடிவுக்கு முன் சென் யுஃபெய் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதால், சிந்து வெற்றி பெற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டம் எதுவும் இல்லாத சிந்துவுக்கு இது பட்டத்தை நெருங்கும் முக்கிய தருணமாக அமைந்துள்ளது.

டோக்யோவில் நடந்த அரையிறுதி போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனும் சீன வீராங்கனையுமான சென் யுஃபெய் உடன் சிந்து மோதினார். இப்போட்டியில் சிந்து வெல்லும் தறுவாயில் இருந்தநிலையில் சீன வீராங்கனை காயம் காரணமாக விலகினார். இதனால் சிந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.

pv sindhu

ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் பெற்றவரான பிவி சிந்து கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச பட்டம் எதுவும் வெல்லாத நிலையில், தற்போது அதை வெல்ல நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.