விளையாட்டு

அடுத்தடுத்து 2 ஈஸி கேட்ச் மிஸ்.. ஒரு ரன்னில் அவுட்.. என்னதான் ஆச்சு கோலிக்கு.!

அடுத்தடுத்து 2 ஈஸி கேட்ச் மிஸ்.. ஒரு ரன்னில் அவுட்.. என்னதான் ஆச்சு கோலிக்கு.!

webteam

கிரிக்கெட் உலகில் கிளாசிக் பேட்ஸ்மேன் ஆக திகழ்பவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. சிறந்த பேட்ஸ்மேன் ஆக மட்டுமல்லாமல் உலகின் சிறந்த பீல்டர்களில் ஒருவராகவும் அவர் திகழ்ந்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு விராட் கோலி களத்தில் துடிப்பான வீரராக இருப்பார். பெரும்பாலும் பீல்டிங் செய்யும் போது எந்தவொரு பந்தையும் அவர் தவறவிடமாட்டார். ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மிகவும் பரிதாபமாக நிலைக்கு தள்ளப்பட்டார் விராட் கோலி.

ஐபிஎல் தொடரின் 6வது போட்டி பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே துபையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கே.எல்.ராகுலின் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்தது. 20 ஓவர்களுக்கு 200 ரன்களுக்கு மேல் என்பது மிகச்சவாலான ஒரு இலக்காகும்.

ஆனால் இதற்கு பெங்களூர் கேப்டன் விராட் கோலி ஒரு காரணமாக அமைந்துவிட்டார். டேல் ஸ்டின் வீசிய 17வது ஓவரின் கடைசி பந்தில் கே.எல்.ராகுல் சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்தார். அந்த கேட்ச் விராட் கோலியின் கைக்கு சென்றது. எப்போதுமே கேட்ச் பிடிப்பதில் மட்டுமல்ல ஃபீல்டிங்கிலும் கில்லாடியான விராட் கோலி, இந்த முறை தவறவிட்டார். அப்போது கே.எல்.ராகுல் 84 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தான் சதம் அடித்தார்.

அதைத்தொடர்ந்து சைனி வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்திலும் ராகுல் கேட்ச்சை கோலி தவறிவிட்டார். இதுபோன்று 2 முறை கோலி கேட்ச்சை கோலி தவறவிட்டு இதற்கு முன்னர் கிரிக்கெட் உலகம் இதற்கு முன்னர் பார்த்ததில்லை. இரண்டாவது முறை ஆட்டமிழந்த போது ராகுல் 89 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பிறகு அவர் சந்தித்த 14 பந்துகளில் 43 ரன்கள் விளாசி தள்ளினார். பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர் மழை பொழிந்த கே.எல்.ராகுல் இறுதியில் 69 பந்துகளில் 139 ரன்களை விளாவிட்டுச் சென்றார்.

பந்துவீச்சில் பெங்களூரு அணி சொதப்பிய நிலையில், பேட்டிங்கிலும் பரிதாபமான நிலையில் உள்ளது. 4 ரன்களை எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்தது.