15-வது சீசன் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி, பிளே ஆஃப்ஸ்க்கு முன்னேறும் வகையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, பிளே ஆஃப்ஸ்க்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் அடுத்த 3 இடங்களை பிடிக்க இனி வரும் போட்டிகளில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். 70 லீக் போட்டிகளில் இதுவரை 41 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெறும் 42-வது லீக் போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது.
அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோயினிஸ், தீபக் ஹூடா, க்ருணால் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய் , ஆவேஷ் கான், மொஹ்சின் கான்
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோ, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா