விளையாட்டு

'இந்தியா என் வாழ்கையை மாற்றியது' - மோடியின் கடிதத்திற்கு பதில் கொடுத்த பிரெட் லீ-ஹேடன்

EllusamyKarthik

இந்தியாவின் குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்திய நாட்டின் மீது மெய்யான அன்பு கொண்ட வெளிநாட்டை சேர்ந்த இந்தியாவின் நண்பர்கள் சிலருக்கு கடிதம் மூலம் குடியரசு தின வாழ்த்து சொல்லியிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதில் கிறிஸ் கெயில், ஜான்டி ரோட்ஸ், பிரெட் லீ, மேத்யூ ஹேடன் மாதிரியான கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர். அதில் கிறிஸ் கெயில் மற்றும் ஜான்டி ரோட்ஸ் ஏற்கனவே தங்களது ரிப்ளையை கொடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெட் லீ மற்றும் மேத்யூ ஹேடன் ரிப்ளை கொடுத்துள்ளனர். 

“இந்த கடிதத்தை பெறுவதில் பெருமிதம் கொள்கிறேன். பிரதமர் மோடிக்கு நன்றி. நான் இந்தியாவையும், அதன் மக்களையும் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் ரகசியம் ஏதுமில்லை. எனது பதில் கொஞ்சம் லேட்தான். இந்திய குடியரசு தின வாழ்த்துகள் இந்தியா” என பிரெட் லீ தெரிவித்துள்ளார். 

‘இந்தியாவை நேசிக்கிறேன்’ - ஹேடன்!

 

“இந்தியா என் வாழ்கையை மாற்றியது. நம் இரு நாட்டுக்கும் இடையே வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளில் எனது பங்கு எப்போதும் இருக்கும். இந்தியாவை நான் நேசிக்கிறேன். அதன் பன்முகத்தன்மை, கலாச்சாரம் என அனைத்தையும் நேசிக்கிறேன். அதோடு நம் கிரிக்கெட் விளையாட்டையும்” என தெரிவித்துள்ளார் ஹேடன்.