விளையாட்டு

கும்ப்ளே விலகினார்... கோலிக்கு நெருக்கடி?

கும்ப்ளே விலகினார்... கோலிக்கு நெருக்கடி?

webteam

இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பதவி விலகியதைத் தொடர்ந்து, கேப்டன் விராத் கோலிக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில் நடந்த பிசிசிஐ நிர்வாகக் குழுவுடனான சந்திப்பின் போது, கேப்டன் பொறுப்பில் சரியாக செயல்படவில்லை என்றால், அந்த பதவியில் இருந்து விலகுமாறு கோலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பயிற்சியாளர் இல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள விராத் கோலிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பயிற்சியாளார் தேர்வில் வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள கோலிக்கு, கும்ப்ளே பதவி விலகல் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், கேப்டன் பதவியை விராத் கோலி இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.