புதுச்சேரி உப்பளம் பகுதியில் ப்ளூவேல் கேம் விளையாடி இளம்பெண் மீட்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சசிகாந்த போரா தான் தங்கியிருந்த விடுதி பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவரின் தற்கொலைக்கு ‘ப்ளூவேல்’ விளையாட்டு காரணமா? என சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ப்ளூவேல் விளையாட்டு தொடர்பாக புதுச்சேரியில் தீவிர கண்கணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி உப்பளம் பகுதியில் இளம்பெண் ஒரு இளம்பெண் ப்ளூவேல் கேம் விளையாடியது தெரிய வந்தது. அவரை மீட்ட போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.