விளையாட்டு

களமிறங்குகிறார் முதல் பெண் அம்பயர்!

களமிறங்குகிறார் முதல் பெண் அம்பயர்!

webteam

ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் அம்பயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் உள்ளூர் அணிகள் மோதுகின்றன. இதில் ஆஸ்திரேலியா லெவன், நியூசவுத் வேல்ஸ் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளன. இந்தப் போட்டியில் கிளைர் போலோசாக் என்ற பெண், அம்பயராக களமிறங்குகிறார். இவர் பிரபல நடுவர் பால் வில்சனுடன் இணைந்து இதில் நடுவராக
செயல்பட உள்ளார். 

29 வயதான கிளைர், இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்கு போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுள்ளார். ஆண்கள் கிரிக்கெட்டுக்கு நடுவராக செயல்பட இருப்பது பற்றி கூறும்போது, ‘நான் அதிகமாக கிரிக்கெட் பார்ப்பேன். எனது பெற்றோர் நடுவர் தேர்வுக்கு படிக்க வைத்தனர். ஆனால், இதற்கான தேர்வில் சிலமுறை பெயில் ஆகிவிட்டேன். பிறகு போராடி வென்றேன். ஆனால் நான் ஒரு போதும் கிரிக்கெட் விளையாடியதில்லை’ என்கிறார் கிளைர்.

வாங்கம்மா வணக்கம்மா!