விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற போலந்து வீராங்கனை

webteam

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டத்திற்கான இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், துனிஷியாவின் ஓன்ஸ் ஜெபர் உடன் மோதினார். முதல் செட்டை 6-2 என ஸ்வியாடெக் எளிதில் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் துனிஷியா வீராங்கனை கடும் சவால் அளித்தார். எனினும் டை பிரேக்கர் வரை நீடித்த அந்த செட்டை 7-6 என ஸ்வியாடெக் போராடி வென்றார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் முதல் முறையாக அவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்வியாடெக் வென்ற மூன்றாவது பட்டம் இதுவாகும். இதற்கு முன் 2020ஆம் ஆண்டிலும் அதனைத் தொடர்ந்து நடப்பாண்டிலும் பிரெஞ்ச் ஓபனில் வாகைசூடியுள்ளார்.

இதையும் படிக்க: சென்னை ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் விளையாடிய இந்திய வீராங்கனைகள் 5 பேரும் தோல்வி!