விளையாட்டு

2022 ஃபிபா உலகக் கோப்பை: ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு

EllusamyKarthik

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து யுத்தம் செய்து வருகிறது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனக் குரலை எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் 2022 ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான பிளே ஆஃப் போட்டியில் ரஷ்யாவுக்கு எதிராக விளையாட போவதில்லை என போலாந்து நாட்டின் கால்பந்தாட்ட கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் படையெடுப்புக்கு எதிராக இதனை செய்துள்ளதாக தெரிகிறது.

போலந்து நாட்டின் கால்பந்தாட்ட கூட்டமைப்பு தலைவர் Cezary Kulesza தெரிவித்துள்ளார். வரும் மார்ச் 24-ஆம் தேதி அன்று இரு அணிகளும் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற இருந்த பிளே ஆஃப் போட்டியில் விளையாட இருந்த நிலையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா ஃபிபா உலகக் கோப்பை தொடரை ஹோஸ்ட் செய்திருந்தது.

ஸ்வீடன், செக் குடியரசு மற்றும் போலந்து ஆகிய நாடுகள் கூட்டாக சேர்ந்து ரஷ்யாவில் நடைபெற உள்ள பிளே ஆஃப் போட்டிகளை வேறொரு நாட்டிற்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளன.

முன்னதாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த பார்முலா 1 கார் பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டல் ரஷ்யாவில் நடைபெற உள்ள கிராண்ட் பிரிக்ஸில் பங்கேற்கப்போவதில்லை என சொல்லியிருந்தார்.