விளையாட்டு

சி.எஸ்.கே, ஐதராபாத் அணிகளுக்கு வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி

webteam

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பையில் நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசி வருகிறது. இந்த போட்டி தொடர்பாக பிரதமர் மோடி, “இறுதிப் போட்டியை விளையாடும் சி.எஸ்.கே மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு எனது வாழ்த்துக்கள். ஒரு அற்புதமான விளையாட்டு அமையட்டும். நமது சமுதாயத்தில் விளையாட்டு வீரர்கள் அதிகம் பரவட்டும்” என தெரிவித்துள்ளதாக, ஐபிஎல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி விடுத்த, உடல் ஆரோக்கிய சவாலை மோடி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி, ஐதராபாத் அணி 12.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 47 (36) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துளார். சாகிப் உல் ஹாசன் 18 (8) என்ற ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றார். இதுதவிர, முதன்முறை இன்றைய ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.