உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய மகளிர் அணி வீராங்கனைகளை பிரதமர் மோடி கௌரவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுடன் புகைப்படமும் மோடி எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய மோடி, அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தார். இந்திய அணி வீராங்கனைகள் கையெழுத்திட்ட பேட் ஒன்றினையும் பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், பிசிசிஐ நிர்வாகக் குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி மற்றும் இந்திய மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். முன்னதாக பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் மகளிர் அணி வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.