விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் அதிக ‘டக் அவுட்’ ஆன வீரர் யார் தெரியுமா..?

ஐபிஎல் வரலாற்றில் அதிக ‘டக் அவுட்’ ஆன வீரர் யார் தெரியுமா..?

rajakannan

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான வீரர்கள் பலரும் அதிக முறை டக் அவுட் ஆகியுள்ளனர். இதில், தற்போது சென்னை அணியில் விளையாடி வரும் ஹர்பஜன் சிங் முதலிடத்தில் உள்ளார். இந்த தொடரை தவிர்த்து இதற்கு முன்பு மும்பை இண்டியன்ஸ் அணியில் தான் அனைத்து தொடர்களிலும் இடம் பெற்றிருந்தார். மொத்தம் 142 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன் 13 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். 

ஹர்பஜன் சிங்கை தொடர்ந்து, பியூவ் சாவ்லா, மணிஷ் பாண்டே, பார்த்திவ் பட்டேல், கவுதம் காம்பீர் ஆகியோர் 12 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். ரோகித் சர்மா 11 முறையும், மிஸ்ரா மற்றும் ரகானே தலா 10 முறையும் டக் ஆகியிருக்கிறார்கள். புவனேஸ்குமார், மேக்ஸ்வெல், மன்தீப் சிங், காலிஸ் மற்றும் ராயுடு ஆகியோர் 9 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். தற்போது, 11வது ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.