விளையாட்டு

இந்தியாவில் சாதித்துவிட்டால் எங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்: க்ளென் மெக்ராத்

இந்தியாவில் சாதித்துவிட்டால் எங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்: க்ளென் மெக்ராத்

webteam

இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளராக சாதித்துவிட்டால், உலகில் எங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் எம்.ஆர்.எப் பந்துவீச்சு பயிற்சி முகாம் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் இடையே ஆன 25 ஆண்டு காலம் நிறைவு பெற்றதற்கான வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பந்துவீச்சாளர்கள் கிளென் மெக்ராத், ரியான் ஹாரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர், அவர்களது சேவையை பாராட்டி எம்.ஆர்.எப் சார்பாக பாராட்டு அளிக்கப்பட்டது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த க்ளென் மெக்ராத், கிரிக்கெட் போட்டி தொழில்நுட்ப ரீதியில் மிகவும் வளர்ந்துவிட்டது. அந்த தொழில்நுட்பத்தை சரியாக கையாள வேண்டியது அவசியம். ஆடுகள சிதோஷன நிலைக்கு ஏற்றவாறு நமது ஆட்டத்தை வகுப்பது மிகவும் அவசியம். கிரிக்கெட் தற்போது பேட்ஸ்மேன் சாதகமாக மாறியுள்ளது, எனவே பந்துவீச்சாளர்கள் புதிய வகையான பந்துகளை மாற்றி வீச வேண்டும். இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளராக சாதித்துவிட்டால், உலகில் எங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்றார்.

மேலும் கடுமையான பயிற்சியை மேற்கொள்ளுங்கள், தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பந்துவீச முயற்சி செய்யுங்கள் என்பதே இளைஞர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்ப்புகிறேன் என்று க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.