விளையாட்டு

"கேப்டன் தோனி, ஏ கூல் அண்ட் கிரேட் கேப்டன்" விஜயகாந்த் வாழ்த்து

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனி, சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அதற்கு நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களும் தோனியைப் பாராட்டிவருகின்றனர்.

தற்போது தேசிய முற்போக்குத் திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த், டdவிட்டர் பதிவில் தோனியைப் பாராட்டியுள்ளார். அதில், " இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக, பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியதையும் தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக "கேப்டன் தோனி, ஏ கூல் அண்ட் கிரேட் கேப்டன்" என்றும் விஜயகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.