பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் மீது கூறப்பட்ட புகாரை, அவர் நிராகரித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். இப்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு தலைவராக இருக்கிறார். இவர் கடந்த வருடம் தனடு மருமகன் இமாம் உல்-ஹக்கை அணியில் சேர்த்ததற்காக விமர்சிக்கப்பட்டார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவரை அணியில் சேர்த்ததாகச் சர்ச்சை எழுந்தது. ஆனால், இமாம் ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, நான்கு சதம் அடித்து தன்னை நிரூபித்ததால் அந்த சர்ச்சை ஓய்ந்து முடிந்தது.
இந்நிலையில் இப்போது மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி தன் மகன் இப்தஸம் உல்-ஹக்கை 19 வயது க்கு உட்பட்டோருக்கான அணியில் சேர்த்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சி யாளர் பசித் அலியிடம் இன்சமாம் பேசியதாகவும் இதையடுத்து அவர் மகன் அணியில் சேர்க்கப்பட்டதாகவும் முன்னாள் அணி தேர்வுக் குழு தலைவர் அப்துல் காதிர் புகார் கூறியிருந்தார்.
Read Also -> ஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்!
Read Also -> கவுண்டி கிரிக்கெட்டில் முரளி விஜய் அபார சதம்!
இது பிரச்னையானதை அடுத்து இன்சமாம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘என் மீது ஆதாரமில்லாமல் கெட்ட நோக்கத்தோடு கூறப்படும் புகாரை நிராகரிக்கிறேன். என் மகனை அணியில் சேர்ப்பதற்காக நான் யாரிடமும் பேசியதில்லை. அதில் உண்மையுமில்லை. நான் இதை தீவிர மாக எடுத்துக்கொள்கிறேன். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருக்கு கோரிக்கை வைக் கிறேன்’ என்று கூறியுள்ளார்.
பசித் அலியும் தன்னிடம் இன்சமாம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்சமாம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.