விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரானார் யூனிஸ் கான்

EllusamyKarthik

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். 

“யூனிஸ் கான் தனது திறனை பயன்படுத்தி பல உள்ளூர் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்திறனை வளர்த்துள்ளார். அதை இப்போது அவர் பாகிஸ்தானுக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் செய்ய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அதனால் அவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளோம். இதன் மூலம் பாகிஸ்தானில் திறம்படைத்த இளம் வீரர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். வரும் 2022 டி20 உலக கோப்பை வரை யூனிஸ் கான் இந்த பணியை கவனிப்பார்” என தெரிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். 

பாகிஸ்தானுக்காக 118 டெஸ்ட், 265 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் யூனிஸ் கான் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த ஒரே வீரரும் யூனிஸ் கான் தான். 

“கோச்சிங் வாய்ப்பை கவனிக்க ஆர்வமாக உள்ளேன்” என சொல்லியுள்ளார் யூனிஸ்.