ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3ஆவது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் புஜாரா 130 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 214 பந்துகளில் சதமடித்தார். ஆனால், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியதால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா அடுத்த 30 ரன்களை 114 பந்துகளில் எடுத்தார். அவரை ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஒருநாள் முழுவதும் எடுத்த முயற்சிகள் இறுதிவரை பலனளிக்கவில்லை. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மொத்தம் 130 ஓவர்கள் வீசியுள்ள நிலையில், புஜாரா மட்டும் 54.4 ஓவர்களை அதாவது 328 பந்துகளை எதிர்கொண்டார்.