இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது ஒரு நாள் போட்டி பல்லகெலேயில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி வென்று, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசும் போது, அவரது பந்தை ஆட முடியாமல் தவித்தார் இலங்கை வீரர் சண்டிமால். அவர் 25 ரன்னில் இருந்தபோது பாண்ட்யா வீசிய ஷாட் பிட்ச் பந்து, அவரது பெருவிரலைப் பதம் பார்த்தது. வலியால் துடித்த அவர், பின்னர் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்து ஆடினார். ஆனால், அவருக்கு விரல் வலி விடவில்லை. 36 ரன்னில் ஆட்டமிழந்த அவர், பின்னர் பீல்டிங் செய்ய வரவில்லை.
பரிசோதனையில் அவரது பெருவிரலில் சிறிதளவு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மற்ற போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.