விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!

JustinDurai

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது லீக் ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.   

நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய பூஜா வஸ்த்ரகர் 67 ரன்களும், சினே ராணா 53 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள், இந்திய அணியின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 43 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 137 ரன்களில் சுருண்டது. இதனால் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.  

சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது.

இதையும் படிக்க: மொகாலி டெஸ்ட்: பவுலிங்கிலும் மிரட்டிய ஜடேஜா - பரிதாப நிலையில் இலங்கை