விளையாட்டு

கராச்சி டெஸ்ட்: தென்னாப்ரிக்காவை ஊதி தள்ளி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி

கராச்சி டெஸ்ட்: தென்னாப்ரிக்காவை ஊதி தள்ளி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி

jagadeesh

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வந்தது. இதில், முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியில், ஆலம் 109 ரன்கள் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 378 ரன்களை குவித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி மொத்தம் 158 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஏய்டன் மார்க்ரம் 74, வாண்டர் டூசண் 64, புவமா 40 ரன்களை குவித்தனர். பாகிஸ்தானின் நவுமன் அலி 5 விக்கெட்டையும், யசீர் ஷா 4 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்கள் முன்னிலைப் பெற்று இலக்காக நிர்ணயித்தது. இதனை மூன்று விக்கெட் மட்டுமே இழந்து 90 ரன்களை எட்டி வெற்றிப்பெற்றது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.