விளையாட்டு

ஐசிசி ட்விட்டர் வாக்கெடுப்பில் கோலியை பின்னுக்கு தள்ளிய இம்ரான் கான்!

ஐசிசி ட்விட்டர் வாக்கெடுப்பில் கோலியை பின்னுக்கு தள்ளிய இம்ரான் கான்!

EllusamyKarthik

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய 24 மணி நேர ட்விட்டர் வாக்கெடுப்பில் இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முந்தியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் பிரதமருமான இம்ரான் கான். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் செம ஹேப்பியாகி உள்ளனர். குறிப்பாக கோலியை இம்ரான் கான் முந்தியதே இந்த கொண்டாட்டத்திற்கு காரணமாக உள்ளது. 

கேப்டன் பொறுப்பில் இவர்களில் யார் சிறந்தவர்கள்? என ஐசிசி கேட்டிருந்தது. அதில் இந்தியாவின் கோலி, தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் மற்றும் பாகிஸ்தானின் இம்ரான் கான் இடம்பெற்றிருந்தனர். இந்த ட்விட்டர் வாக்கெடுப்பில் சுமார் 536346 பேர் பங்கேற்றிருந்தனர். அதில் 47.3 சதவிகிதம் பேர் இம்ரான் கானுக்கு வாக்களித்திருந்தனர். அதனால் அவர் இந்த வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவின் கோலி 46.2 சதவிகித வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். கடந்த பத்து ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்ரான் கான் இந்த வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்திருப்பது பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.