விளையாட்டு

பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகமது அமீர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகல்

EllusamyKarthik

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்று உள்ளார். அந்த அணி மனரீதியாக கொடுக்கும் அழுத்தமே இந்த முடிவுக்கு காரணம் என வீடியோ மூலம் அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது. 

“இனி வரும் நாட்களில் நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட போவதில்லை. இந்த முடிவுக்கு காரணம் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தினரின் அழுத்தம்தான். என்னை இழிவானவனாக எண்ணியே அணியில் நடத்தினர். நான் ஷார்ட்டர் ஃபார்மெட் கிரிக்கெட்டில் விளையாட தயாராக இருந்தும் அணியில் எனக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிர்வாத்தின் கீழ் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என கருதுகிறேன். அதனால் நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறேன். தடையிலிருந்து நான் திரும்பி வந்தபோது எனக்கு வாய்ப்பு கொடுத்த அப்ரிடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார். 

இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. 36 டெஸ்ட், 61 ஒருநாள், 49 டி20 போட்டிகளில் அமீர் பாகிஸ்தானுக்காக விளையாடி உள்ளார். கடந்த 2019 இல் அமீர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

2019 உலகக் கோப்பையில் 8 ஆட்டங்களில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல அமீர் பெரிதும் உதவியிருந்தார். ரோகித், தவான், கோலி என இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை அந்த ஆட்டத்தில் அமீர் கைப்பற்றி இருந்தார்.